search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய் தூர்வாரும் பணி"

    • குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் செல்லும் கோம்பு பள்ளம் கால்வாய் உள்ளது.
    • கோம்பு பள்ளம் கால்வாய் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்டு, பள்ளத்தின் மையப் பகுதியில் கழிவுநீர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் செல்லும் கோம்பு பள்ளம் கால்வாய் உள்ளது. இது கத்தேரி பகுதியில் தொடங்கி காவிரி ஆற்றங்கரையோரம் மணிமேகலை வீதி வரை செல்கிறது. சமீபத்தில் இந்த கோம்பு பள்ளம் கால்வாய் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்டு, பள்ளத்தின் மையப் பகுதியில் கழிவுநீர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் பொதுமக்க ளின் இன்னல்களைப் போக்கும் வகையில், கோம்பு பள்ளத்தை தூய்மை படுத்தி, பள்ளத்தின் மையப்பகுதியில் கழிவுநீர் எளிதில் செல்லும்படி, அடைப்பு களை நீக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, பொக்லின் மூலம் கோம்பு பள்ளம் தூர் வாரப்பட்டது. மேலும் கோம்பு பள்ளத்தில் குப்பைகள் கொட்டுவோர் குறித்து சி.சி.டி.வி. கேமரா வைத்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×